ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பை

ராசிபுரம், செப்.25: சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அருகேயுள்ளது ஆண்டகளூர் கேட். இப்பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், ஹோட்டல்கள், கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இதிலிருந்து சேகரமாகும் கழிவுகள் அனைத்தும், அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சுவர் அருகே கொட்டப்படுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு அபாயமும் நிலவுகிறது. இதன் காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : National Highway ,Rasipuram ,
× RELATED ஊட்டி நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி துவக்க கோரிக்கை