×

அரசாணைப்படி கோயில் பூசாரிகளுக்கு மாடுகளை வழங்கவேண்டும்

நாமக்கல், செப்.25: அரசாணைப்படி கோயில் பூசாரிகளுக்கு மாடுகளை வழங்க வேண்டுமென கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு மற்றும் அச்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரேசனை சந்தித்து, ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:திருக்கோயிலுக்கு தானமாக வரும் மாடுகளை, கோயில் பூசாரிகள் நலசங்கத்தின் உறுப்பினர்களுக்கு சேலம் இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள 5 கோயில்களில் 2 கோயில்களான சேந்தமங்கலம் நைனாமலை வரதராஜபெருமாள் கோயில், ராசிபுரம் உரம்பு வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவை அரசாணையில் இடம் பெற்றுள்ளது. இதில், நைனாமலை பெருமாள் கோயிலுக்கு வரும் மாடுகள் மட்டும் அரசாணைப்படி, கோயில் பூசாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உரம்பு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தானமாக வரும் மாடுகளை அரசாணைப்படி வழங்குவதில்லை. எனவே, அந்த கோயிலுக்கு வரும் மாடுகளை பூசாரிகள் நலச்சங்க உறுப்பினர்களுக்கு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு வாசு தெரிவித்துள்ளார். இதற்கு உதவி ஆணையர், அரசாணையை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : temple priests ,
× RELATED 23 லட்சம் பேர் திமுகவுக்கு ஆதரவு: தமிழக...