×

சுண்டம்பட்டி கிராமத்தில் வீடு வீடாக கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, செப்.25: சுண்டம்பட்டி கிராமத்தில் டெங்கு மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர், பர்கூர் ஒன்றியம் ஒரப்பம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டம்பட்டி கிராமத்தில் டெங்கு மற்றும் தூய்மை பணிகளை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டி, மழைநீர் தேங்கி டெங்கு உற்பத்தி செய்யும் ஏடிஎஸ் வகை கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பயன்பாட்டில் இல்லாத பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். அதைத் தொடர்ந்து மருதேப்பள்ளி, கிட்டப்பநாயனப்பள்ளி கிராமங்களில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்டாமல் உள்ள பயனாளிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். இந்த ஆய்வின் போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ப்ரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ்அகமது, செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Residence ,Sundampatti Village ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...