×

போச்சம்பள்ளி ஒன்றியத்தில் எம்பி நன்றி அறிவிப்பு கூட்டம்

போச்சம்பள்ளி, செப்.25: போச்சம்பள்ளி ஒன்றியத்தில் காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லகுமார் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் திமுக மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், திமுக ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கின்றனர். அதன்படி, இன்று (25ம்தேதி) போச்சம்பள்ளி ஒன்றியத்தில் காலை 8.30 மணிக்கும், மகாதேகொல்லஅள்ளியில் 9 மணிக்கும், சந்தூரில் 9.30 மணிக்கும், வெப்பாலம்பட்டியில் 10 மணிக்கும், குள்ளம்பட்டியில் 10.30 மணிக்கும், வலசகவுண்டனூரில் 11 மணிக்கும், புளியம்பட்டி 11.30 மணிக்கும், போச்சம்பள்ளியில் 12 மணிக்கும், பாளேத்தோட்டம் பகுதியில் 12.30 மணிக்கும், பாரண்டப்பள்ளியில் 1 மணிக்கும், தாதம்பட்டியில் 1.30 மணிக்கும், ஜிங்கல்கதிரம்பட்டியில் 3 மணிக்கும், பாப்பாரப்பட்டியில் 3.30 மணிக்கும், பண்ணந்தூரில் 4 மணிக்கும், வாடமங்கலத்தில் 4.30 மணிக்கும், அரசம்பட்டியில் 5 மணிக்கும், புலியூரில் 5.30 மணிக்கும், கீழ்குப்பம் பகுதியில் மாலை 6 மணிக்கும், பாரூரில் 6.30 மணிக்கும், செல்லம்பட்டியில் இரவு 7 மணிக்கும், மருதேரியில் 7.30 மணிக்கும், செல்லம்பட்டி கூட்ரோட்டில் 8 மணிக்கும், கரடியூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Tags : meeting ,Pochampally Union ,
× RELATED டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில்...