×

ஓசூரில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓசூர், செப்.25:ஓசூரில் தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்முறை விளக்கம் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.  நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, பேரிடர் மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். ஓசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முனிராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜா, முருகன், யுவராஜ், சீனிவாசன், ஈஸ்வரன், ராமன், பொன்மணி ஆகியோர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, தீ விபத்துகள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஓசூர் வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்-கன்னியாகுமரிக்கு முன்னாள் மாணவர்கள் நடைபயணம்காவேரிப்பட்டணம், செப்.25: காவேரிப்பட்டணம்  அரசுப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் நடைபயிற்சியின்  முக்கியத்துவத்தை வலியுறுத்தி காவேரிபட்டணத்திலிருந்து கன்னியாகுமாரி வரை  555 கி.மீ தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
 
காவேரிப்பட்டணம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கெளதம் மற்றும் ரகு  ஆகியோர் காவேரிப்பட்டணத்திலிருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம்  மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு உடற்கல்வி இயக்குநர் பவுன்ராஜ் வரவேற்றார்.  அரிமா சங்க முன்னாள் மண்டலத்தலைவர் சுப்பிரமணி, ரெட்கிராஸ் சொசைட்டி  செயலர் செந்தில்குமார், அன்பு ஆத்மாலயா நிறுவனர் அன்பு ஆகியோர் முன்னிலை  வகித்தனர். தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ  அலுவலர் ஹரிராம் கொடியசைத்து முன்னாள் மாணவர்களின் நடைபயணத்தை துவக்கி  வைத்தார். இவர்களின் நடைபயணமானது வரும் அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியில்   நிறைவடைகிறது.  டாக்டர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் பல்வேறு  அறக்கட்டளை மற்றும் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ