×

தனியார் மயத்தை கண்டித்து ஓசூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

ஓசூர், செப்.25: ஓசூர் காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை கண்டித்து ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டிட சங்க மாவட்ட செயலாளர் பூதட்டியப்பா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த பல லட்சம் கோடி சேமிப்பு நிதி கார்ப்பரேட்டுகளின் தேவைகளுக்காக களவாடப்பட்டு வருகிறது. 44 தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியதால், தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பும், சம்பள பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கட்டிட சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், அண்ணாதுரை, முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், சிபிஐ மாநிலக்குழு இலகுமய்யா, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மாதைய்யா, மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டிட சங்க மாவட்ட தலைவர் நஞ்சப்பா நன்றி கூறினார்.

Tags : AITUC ,demonstration ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ