×

தேன்கனிக்கோட்டை அருகே வனத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

தேன்கனிக்கோட்டை, செப்.25: தேன்கனிக்கோட்டை அருகே வனத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகம் தொலுவபெட்டா வனப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளதாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வன காப்பாளர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தெலுவபெட்டா கிராமத்தை சேர்ந்த மாரப்பா(55), முனியப்பா(55), முனிராஜ்(40) ஆகியோர் வனத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் நோக்கில் வேலி போட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜிக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில், அவர்கள் 3 பேரையும் கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : land ,Thenkanikottai ,Forest Department ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!