×

மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை முதன்மை செயலர் ஆய்வு

திருப்பூர், செப். 25: திருப்பூர் மாநகராட்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், நேற்று திருப்பூர் வந்த நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் அரசு முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங் மற்றும் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் ஆகியோர் பாண்டியன் நகரில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் டவுன்ஹால் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாநாட்டு அரங்கு பணிகளையும் பார்வையிட்டார். அப்பேது அங்கிருந்த அதிகாரிகளிடம், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அவை எவ்வாறு திட்டமிட்டு கட்டப்படுகிறது என்பது பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், மாநகர பொறியாளர் ரவி, நகர்நல அலுவலர் பூபதி, செயற்ெபாறியாளர், திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : corporation ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை