×

பிஷப் நர்சிங் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா

தாராபுரம், செப்.25: தாராபுரம் பிஷப் நர்சிங் கல்லூரியின் 22ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் கல்லூரியின் தலைவர் மற்றும் திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தனர். கல்லூரியின் நிர்வாகி ரவீந்திரன் முன்னிலையில் காருண்யா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் இளநிலை செவிலியர் பயிற்சியை முடித்த 46 மாணவிகளுக்கும், முதுநிலை செவிலியர் பட்டம் பெற்ற இரண்டு மாணவிகளுக்கும் பட்டத்தை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: ‘‘இந்தியாவில் தற்காலத்தில் செவிலியர் சேவை இன்றியமையாததாக உள்ளது, சேவை மனப்பான்மையுடன் இங்கே பயிற்சியை முடித்த மாணவிகள் வெளிநாடுகளில் சென்று தங்கள் பணியை செய்வதை முடிந்தவரை தவிர்த்து உள்நாட்டிலேயே அதுவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதியில் செவிலியர் பணியை சேவையாக செய்வது சிறந்ததாக அமையும்,’’ என்றார்,   விழாவில், குமாரபாளையம் அன்னை ஜே.கே.கே. செவிலியர் கல்லூரியின் டீன் டாக்டர் ஜெயசீலன், திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் பொருளாளர் ராஜேந்திரன், குருத்துவ செயலாளர் சுதர்சன், பெண்கள் ஐக்கிய சங்க தலைவி ரோஸ்லின் சந்திரசேகரன்  மாணவிகளுக்கு விருது வழங்கினர்.
சிறந்த மாணவிகளாக சமிதா,  கிளாடினா ஏஞ்சல் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு  பெரம்பலூர்  கொள்ளிடம் மறை மாவட்டத்தலைவர் நிர்மல்குமார் விருது வழங்கினார். மறை மாவட்ட தலைவர் பால் ரத்தினம், கல்லூரி  முதல்வர் கிறிஸ்டி மேகலா, துணைமுதல்வர் ஹெப்ஸி சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : graduation ceremony ,Bishop Nursing College ,
× RELATED பிரின்ஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா;...