நிப்ட்-டீ கல்லூரியில் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், செப்.25:  திருப்பூர் முதலிபாளையம்  நிப்ட்-டீ கல்லூரியில் புதிய நிர்வாகிகள்  போட்டியின்றி தேர்வு ெசய்யப்பட்டனர். திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ வளாகத்தில், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி, கல்லூரி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் புதிதாக  பொருளாளர், பொதுச்செயலாளர்; 2 துணை தலைவர், 2 துணை செயலாளர் பதவிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டது.  அதேபோல், நிர்வாக குழு உறுப்பினர் பதவி 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி முதல், வேட்பு மனு தாக்கல் துவங்கி, 20ம் தேதி முடிந்தது.  ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் மோகன், தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்; துணை தலைவர் பதவிக்கு வாசுநாதன், ரங்கசாமி; பொருளாளர் பதவிக்கு கோவிந்தராஜூ. ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி, கல்லுாரி தேர்தலில், பொதுச்செயலாளர் பதவிக்கும்; சீனிவாசன் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், கல்லூரி துணை செயலாளர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், 12 நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு, 12 பேர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தலில், எந்த பதவிக்கும் கூடுதல் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால், நிப்ட்-டீ கல்லூரிக்கு, நிர்வாகிகள் 7 பேர் மற்றும், நிர்வாக குழு உறுப்பினர் 12 பேர், போட்டியின்றி தேர்வாகின்றனர். வரும் 30ம் தேதி மாலை, 5 மணிக்கு, பொதுக்குழு கூடுகிறது. இதில், புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளது

Related Stories:

>