×

அம்மா உணவகத்தில் முறையாக உணவு வழங்கப்படுவதில்ைல


ஊட்டி, செப். 25:   ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.  ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளில் அம்மா உணவகம் உள்ளது. ஊட்டியில் மத்திய பஸ் நிலையம் அருகேயும் மற்றொன்று அரசு மருத்துவமனை அருகேயும் செயல்படுகிறது. இதில், அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதில் குறிப்பாக, மதிய வேளையில் உணவிற்காக சென்றால் ஏதாவது ஒரு உணவு மட்டும் விற்பனைக்கு வைத்துள்ளனர். வேறு உணவு கேட்டால், பொருட்கள் எதுவும் எங்களுக்கு சப்ளை செய்யப்படுவதில்லை.இதனால், எங்களால் அனைத்து உணவுகளும் வழங்க முடியாது என ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், குறைந்த அளவில் உணவு சமைப்பதால், பெரும்பாலானவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இதனால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கவும், முறையாக பொதுமக்களுக்கு உணவுகள் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : mother restaurant ,
× RELATED நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்: ஐகோர்ட்டில் பொதுநல மனு