×

கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஊட்டி, செப். 25:    கேரளா மாநிலம் வயநாட்டில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் அண்மையில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்ேகற்றனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஊட்டி அருகேயுள்ள மடித்தொரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்கள் 7 பேர் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடந்த இப்ேபாட்டியில் மடித்தொரை பள்ளி மாணவர்கள் பதக்கங்களை பெற்றுள்ளனர். இதில் மாணவி கனிஷ்கா தனிநபர் மற்றும் குழு பிரிவில் 3 வெள்ளி பதக்கங்களையும், மாணவிகள் குழு பிரிவில் லினியா, நேத்ரா ஆகியோர் வெண்கல பதக்கமும், மாணவர்கள் பிரிவில் மாதேஷ், நித்தீஸ், பிரித்திவிராஜ் ஆகியோர் வெள்ளி பதக்கமும், ஸ்ரீமன் வெள்ளி பதக்கமும் ெவன்றனர். கராத்தே ேபாட்டிகளில் பதக்கம் வென்று சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ேடார் பாராட்டு தொிவித்தனர்.

Tags : school ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்