×

ராணுவத்தில் சேர அக்.26ல் எழுத்து தேர்வு

ஈரோடு, செப். 25: கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்தது.இம் முகாமில், சோல்ஜர்  ஜீடி பிரிவுகளில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருந்த எழுத்து தேர்வு அக்டோபர் 26ம் தேதிக்கு நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்கள் தேர்வு நாளுக்கு முதல் நாள் 25ம் தேதி இரவு 10 மணிக்கு கோவை மதுக்கரை ரயில்நிலையம் அருகில் உள்ள ஆர்மி கேம்பிற்கு  நேரில் ஆஜராக வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422-2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Army ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...