×

அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி

ஈரோடு, செப்.25: அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் நேற்று மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. இதில், 65 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு பிரிவின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். 13 வயது மாணவ- மாணவிகளுக்கு 5 கி.மீ, 15 வயது மாணவ- மாணவிகளுக்கு 7 கி.மீ, 17 வயது மாணவ- மாணவிகளுக்கு 17 கி.மீ என 3 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டியை, ஈரோடு போக்குவரத்து டிஎஸ்பி எட்டியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 13 வயது பிரிவினருக்கு கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி வீரப்பம்பாளையம் பிரிவு வரையும், 15 வயது பிரிவினருக்கு வீரப்பம்பாளையம் பிரிவில் துவங்கி, பெருந்துறை ரோடு வழியாக திண்டல் சென்று, பின்னர் மீண்டும் வீரப்பம்பாளையத்தில் நிறைவடைந்தது.17 வயது பிரிவுக்கு வீரப்பம்பாளையத்தில் துவங்கி திண்டல், மேட்டுக்கடை வரை சென்று பின்னர், அங்கிருந்து மீண்டும் வீரப்பம்பாளையத்தில் நிறைவடைந்தது. போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 65 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Anna Birthday Bicycle Competition ,
× RELATED தஞ்சையில் அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி