×

திருச்செந்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

திருச்செந்தூர், செப்.25: திருச்செந்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. நிர்வாக தலைவர் வள்ளியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். மண்டபத்தில் விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூத்த உறுப்பினர் சங்கரலிங்கம் சங்க கொடியேற்றினார். இதில், தூத்துக்குடி விஸ்வகர்மா கூட்டுறவு சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன், மாரியப்பன், வக்கீல் ராமச்சந்திரன், குலசை லோகநாதன், பொது மண்டப நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செந்தில்ஆறுமுகம், மணிசங்கர், நயினார், மகராஜன், கருத்தையா, ஹரிராமன், குன்றுமலையான், கணேசன், முருகன், பேச்சிமுத்து, ராமசாமி, விஸ்வகர்ம ஐக்கிய சங்கத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சங்கரசுப்பு, பொருளாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Viswakarma Jayanti Festival ,Thiruchendur ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...