×

திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம்

திருச்செந்தூர், செப்.25: திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோயில் புரட்டாசி ெகாடை விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் தெற்கு நாடார் தெரு முத்துமாலை அம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா கடந்த 22ம்தேதி தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு அம்மனுக்கு மாகாப்பு மற்றும் சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயில் வந்தடைந்தனர்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து திருவீதி சுற்றி அம்மனுக்கு செலுத்துதல். இரவு 12 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவித்து புஷ்பஅலங்கார தீபாராதனை நடந்தது. 12.30 மணிக்கு தேரில் சிங்க வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளத்துடன் கும்பம் எடுத்து வீதிவலம் வந்தது. இன்று காலை படைப்பு தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து கும்பம் எடுத்து தெரு சுற்றி வருதல். மாலையில் கோயிலிருந்து முளைப்பாரி எடுத்து வீதி வலம் வந்து முருகன் கோயில் முன்பு கடலில் செலுத்துதல் விழா 27ம்தேதி வரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Palkudam ,Thiruchendur Muthumalayamman ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர்...