×

தூத்துக்குடியில் இளம்பெண் மாயம்

தூத்துக்குடி,செப்.25: தூத்துக்குடியில் மாயமான நெல்லை இளம்பெண்னை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள தெய்வநாயகபேரியைச் சேர்ந்தவர் திருமணி மகள் ராமலட்சுமி(17). இவர் தனது குடும்பத்துடன் கடந்த 21ம்தேதி தூத்துக்குடி பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது குடும்பத்தினரிடம் தண்ணீர் குடிக்கச் செல்வதாக கூறிச்சென்ற ராமலட்சுமி அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் தப்பி ஓட முயற்சி