×

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை இடமாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி

கடையநல்லூர், செப். 25: கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை இடமாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. கடையநல்லூர் தாலுகாவிற்கு காசிதர்மம் அருகே வனப்பகுதியில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு கடந்த டிச.13ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. போக்குவரத்து வசதியில்லாத இந்த பகுதியில் தாலுகா அலுவலகம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமையில் அனைத்துக்கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரிலும் எம்எல்ஏ, கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், கடையநல்லூரில் நகரின் மையப்பகுதியிலேயே தாலுகா அலுவலகம் கட்டப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகர எல்லையில் கடையநல்லூர் யூனியன் அலுவலகம் அருகே வேளாண்மை துறை அலுவலகம் அமைந்திருந்த இடத்தில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியது.

இந்திலையில் இடைகாலை சேர்ந்த ராமையா கிருஷ்ணன், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை காசிதர்மம் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில்தான் அமைக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றார். இவ்வழக்கில் முகம்மது அபுபக்கர், எதிர்மனுதாரராக தன்னை இணைத்து கொண்டார்.இதனிடையே இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தரணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடையநல்லூர் தாலுகா அலுவலக இடமாற்றம் கோரிய மனுவை தள்ளுபடி செய்ததோடு மாவட்ட கலெக்டருக்கு எந்த இடத்தில் அலுவலகம் கட்டுவது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை வழங்கியும் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ, வழக்கு விவரங்கள் குறித்து தெரிவித்ததுடன் யூனியன் அலுவலகம் அருகே புதிய அலுவலக கட்டிட பணிகளை விரைந்து ெதாடங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Tags : Kadayanallur ,taluk office ,
× RELATED கடையநல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி