×

தென்காசியில் பனைவிதை நடும் விழா

தென்காசி, செப். 25: தென்காசி அடுத்த மத்தளம்பாறையில் 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது. தென்காசியில் ப்ராணா மரம் வளர்ப்பு இயக்கம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் சாலையோர பூங்காக்கள், அரசு  அலுவலகங்கள், வனப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டும், விதைகளை  தூவியும் வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 5 லட்சம்  பனை விதைகளை விதைக்க திட்டமிட்டுள்ளன இவர்கள், இதன் ஒரு கட்டமாக தென்காசி அடுத்த மத்தளம்பாறை நல்லமாடன் புதுக்குளம் பகுதியில் ஒரே நாளில் 2  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர்.துவக்க விழாவுக்கு தென்காசி  இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமை வகித்தார். ரபிக் முகமது முபீன்  முன்னிலை வகித்தார். சங்கரநாராயணன், முத்துக்குமார், வன அலுவலர்  செல்லத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிரானா மரம்  வளர்ப்பு அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

Tags : Palmyra ,planting ceremony ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...