×

அம்பை பஸ்சில் முதியவர் சாவு

அம்பை, செப். 25:  வீரவநல்லூர் செட்டியார் மேலத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (70). ஆஸ்துமா நோயாளியான இவர், குடும்பத்தில் ஆதரவில்லாத நிலையில் பாபநாசம் கோயில் முன் அமர்ந்து யாசகம் எடுத்து வந்தார். கடந்த 22ம் தேதி பெய்த மழையின்போது கடுமையான நோய் பாதிப்புக்குள்ளானார். அவருக்கு வி.கே.புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி தரப்பட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உடல்நலம் சரியான நிலையில் அம்பை பஸ் நிலையம் சென்று பாபநாசம் செல்வதற்காக மினிபஸ்சில் ஏறினார். இதனிடையே சீட்டில் அமர்ந்தபடி அவர் இறந்தார். தகவலறிந்த அம்பை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்ஐ பிச்சையா ஆகியோர் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்