×

அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளி மாணவருக்கு வீரதீர செயல் விருது

நெல்லை, செப். 25: அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளி மாணவருக்கு வீரதீரச் செயல் விருது வழங்கப்பட்டது. தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சாரண, சாரணியர் இயக்க 10வது பெருந்திரள் பேரணி சென்னையில் நடந்தது. 5 நாட்கள் நடந்த இந்தப் பேரணியில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 3 ஆயிரத்து 120 பேர் கலந்து கொண்டனர். சாரண, சாரணியர் இயக்கத்தின் 131 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் வீரதீரச் செயல்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி சாதனை படைத்தனர்.

இதில் அடைக்கலபட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி மாணவர் கார்த்திக் தீபன் குரங்கு தொத்தி, பலூன் உடைத்தல், புகையில்லா சமையல், வட்டு ஏறுதல், ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். இவரின் சாதனையை பாராட்டி சாரணர் இயக்க மாநில பேராணையர் இளங்கோவன், மாநில தலைவர் மணி ஆகியோர் வீரசாகச விருது வழங்கினர். அப்போது தென்காசி சாரண, சாரணியர் இயக்க செயர் நேரு ராஜா உடனிருந்தார். விருது பெற்ற மாணவர் கார்த்திக் தீபனை பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : SMA student ,
× RELATED விஷம் குடித்த தொழிலாளி சாவு