×

ஆர்யவைஸ்யாவினரின் வனிதா மகளிர் மன்ற கூட்டம்

தேனி, செப். 25:ஆர்யவைஸ்யா சமுதாயத்தினருக்கான மகளிர் மன்றமான வனிதா கிளப்பின் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. ஆர்யவைஸ்யா சமுதாயத்தினர் உலகளவில் வாசவி கிளப், மகளிருக்கான வனிதா கிளப் நடத்தி வருகின்றனர். இதில் மகளிருக்கான வனிதா கிளப் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு கிளப் தலைவர் ஸ்ரீவித்யாபாலாஜி தலைமை வகித்தார். செயலாளர் சாந்திபாபு, துணை தலைவர் விசாலாட்சி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை சுமதி செய்தார். கூட்டத்தில், கிளப்பில் உள்ளவர்கள் தயாரிக்கும் உணவு பொருள்களை ஒருவருக்கொருவர் பெற்றுக்கொள்வதுடன் சந்தைப்படுத்துவது எனவும், சமூதாய மன்ற நிறுவனர் கே.சி.குப்தாவின் 100வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Arya Vaisya Vanitha Ladies Forum Meeting ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு