விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்

சிவகங்கை, செப்.25: சிவகங்கையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் செப்.30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்.27ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக செப்.30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Tags : Meeting ,
× RELATED உடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்!