×

வைகை தென்கரை சாலையில் அரிப்பு

மதுரை, செப்.25: மதுரையில் வைகை தென்கரையில் சாலையோரம் மழையால் அரிப்பு ஏற்பட்டுதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மதுரை ஆரப்பாளையத்தில் வைகை ஆற்று தென்கரையில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சாலையோரம் தற்போது மழையால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் சென்று வரும் பஸ்கள், வாகனங்கள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக, சற்று ஓரம் ஒதுக்கினால், வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழும் அபாயம் உள்ளது.

வைகை ஆற்று கரையோ சாலையில், கான்க்ரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆரப்பாளையம் பகுதியில் மட்டும் வைகை கரையோரம் தடுப்புகள் அமைக்கும் அறிகுறி காணவில்லை. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், சாலையோர அரிப்பை சீரமைக்கவும், தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Erosion ,Vaigai ,coconut road ,
× RELATED குமுளி மலைச்சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்: சீரமைக்க கோரிக்கை