×

மலைக்கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா

திண்டுக்கல், செப். 25: செ.பாறைபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மலைக்கோட்டையை பார்க்காத மாணவ, மாணவிகள் 33 பேரை பள்ளி ஆசிரியர் ராமு, முதல் பருவ விடுமுறை தினமான நேற்று தன் சொந்த செலவில் திண்டுக்கல்லுக்கு தனி வேனில் அழைத்து வந்து சுற்றி காட்டினார். மலைக்கோட்டையை தொடர்ந்து திப்புசுல்தான் மணிமண்டபம், குமரன் பூங்கா, மாவட்ட மைய நூலகம் ஆகிய இடங்களுக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து சென்றார். ஆசிரியர் ராமு கூறுகையில், ‘மலைக்கோட்டைக்கு மாணவர்களை 2வது முறையாக அழைத்து வருகிறேன். ரயிலில் பயணிக்காத மாணவர்களை விருதுநகர் காமராசர் இல்லத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து அழைத்து சென்றேன். திண்டுக்கல் அருகில் வசித்த போதும் மலைக்கோட்டையை பலரும் பார்த்து அதன் வரலாற்றை அறிய ஆர்வம் காட்டுவதில்லை. வரலாற்றை நேரில் அறியும் வாய்ப்பை மாணவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்கிறேன்’ என்றார். மாணவர்களுக்கு வழிகாட்டியாக தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த கண்ணன், பிரதீப் குமார் செயல்பட்டு உதவினர்.

Tags : Hill Fort ,
× RELATED திருச்சி மலைக்கோட்டையில் குண்டும், குழியுமாக சேதமடைந்த உள்வீதி சாலை