×

ஒட்டன்சத்திரம் அருகே மழை வேண்டி மழைச்சோறு எடுத்து பெண்கள் வழிபாடு

ஒட்டன்சத்திரம், செப். 25: ஒட்டன்சத்திரம் அருகே மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து கோயில்களில் வழிபட்டனர். ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் கூட இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த போதும் ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகினர்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தை அடுத்த ஈசக்காம்பட்டியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் மழை வேண்டி வீடு, வீடாக மழைச்சோறு எடுத்து அங்குள்ள விநாயகர், காளியம்மன், துர்க்கையம்மன் கோயில்களில் கும்மியடித்து வழிபட்டனர். இதையடுத்து கடந்த 2 நாட்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : women ,Ottansatram ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்