×

பழநி கல்லூரியில் சட்ட உதவி விழிப்புணர்வு

பழநி, செப். 25: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் பழநி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரியின் முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதி கோதாண்டராஜ் அறிவுறுத்தலின்படி வழக்கறிஞர்கள் பால்சாமி, பத்மநாபன், செல்லத்துரை ஆகியோர் சட்டப்பணிகள் குழுவின் பணிகள், மாணவர்களின் உரிமைக்கான சட்டங்கள், ரேகிங் தண்டனைகள், கல்விக்கடன் பெறுவது தொடர்பான சட்டவிதிகள், சட்டத்தை மதித்து நடப்பதன் அவசியம், நன்மைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். பழநி சார்பு நீதிமன்ற இலவச சட்டப்பணிகள் உதவி அலுவலக பிஎல்வி சைமன் நன்றி கூறினார். இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palani College ,
× RELATED பழநியில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்கள் -கல்லூரி மாணவி சாதனை