×

கொடைக்கானலில் தொடர் மழை நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

கொடைக்கானல், செப். 25: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் நடவு பணிகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மண்ணை உழவிட்டு கிழங்கு, பீன்ஸ், காரட் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொடைக்கானலில் பெய்து தொடர் மழையால் நீராதாரங்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் நடவு பணிக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதால் உருளை கிழங்கு, பீன்ஸ், காரட் போன்ற பயிர்களை நட்டு வருகிறோம். கடந்த காலங்களில் அறுவடையின் போது பயிர்கள் அதிக விளைச்சல் கண்டதுடன் நல்ல விலையும் கிடைத்தது. அதேபோல் இந்தாண்டும் அதிக விளைச்சல், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு நடவு பணிகளை துவக்கியுள்ளோம்’ என்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...