×

நவராத்திரி விழா ஊர்வலத்தில் பங்கேற்க குமரி புறப்பட்ட 2 யானைகள் தடுத்து நிறுத்தம் கேரள வனத்துறையினர் அதிரடி

அருமனை,செப்.25 :  திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரகட்டு சரஸ்வதி, குமாரகோயில் முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் யானை மீது பாரம்பரிய முறைப்படி உடைவாள் அணிவகுப்புடன் குமரியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

இதில் இருமாநில அரசு அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்பர். இந்த ஊர்வலம் சுசீந்திரத்தில் இன்று தொடங்க இருக்கிறது. இந்த சுவாமி விக்ரகங்களை ெகாண்டு செல்ல கேரள தேவசம்போர்டை சேர்ந்த ஸ்ரீகண்டேஸ்வரம் சிவகுமார்,மலையின் கீழ் ஸ்ரீவல்லவன் என்ற 2 யானைகள் நேற்று கேரளாவில் இருந்து குமரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. யானைகள் பாறசாலை வந்தபோது, கேரள வனத்துறை அதிகாரிகள் யானைகளை தடுத்து நிறுத்தி யானைகளை தமிழகத்திற்கு கொண்டு செல்ல உரிய ஆணவங்கள் இல்லை என்று கூறி  சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று ஊர்வலம் தொடங்குவதால் யானைகளை குமரி கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kerala Forest Department ,festival ,Navarathri ,Kumari ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...