×

பெண் மாயம்

புதுச்சேரி, செப். 25: மூலகுளம் வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தணிகாசலம் (48), தொழிலாளி. இவரது மனைவி உமாதேவி (45). 2 மகன்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி உமாதேவி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மகன் புகழேந்தி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிந்து மாயமான உமாதேவியை தேடி வருகின்றனர்.Tags :
× RELATED மீண்டும் வெளியே வராததால் மர்மம்...