×

திண்டிவனம் மேம்பாலத்தில் ராட்சத தேன்கூடு அகற்றப்படுமா?

திண்டிவனம், செப். 25: திண்டிவனத்தில் நிலையான பேருந்து நிலையம் இல்லாததால் மேம்பாலத்தின் கீழ் பகுதி பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் மேல் பகுதியில் சென்னை செல்லும் பேருந்து நிறுத்தத்தில் பல மாதங்களாக ராட்சத தேன் கூடு உள்ளது. சென்னை, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வந்து பேருந்துக்காக காத்திருந்து பல ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அதிக பொதுமக்கள் கூடும் இடத்தில் ராட்சத தேன்கூடு உள்ளதால் காற்று வேகமாக வீசும்போது தேன் கூட்டில் உள்ள ஈக்கள் பொதுமக்களை துரத்தித் துரத்தி கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் மேம்பாலத்தின் கீழ் காத்திருந்து பேருந்து ஏறுவதற்கு அச்சப்படுகின்றனர்.ஆகையால் பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள இடத்தில் உள்ள ராட்சத தேன்கூட்டை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே பெண்ணை மறுமணம்...