×

தனியார் முந்திரி தொழிற்சாலையால் பாதிப்பு

கடலூர், செப். 25:   சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முந்திரி தொழிற்சாலையை அகற்ற  வேண்டும் என கடலூரில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில்    பண்ருட்டி அருகே ராஜேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு  அளித்தனர்.
அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது.  ராஜேஸ்வரி நகர்   பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.  மேலும் அருகாமையில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு, நகர்கள் உள்ளன. எங்கள் பகுதியில் மிகப்பெரிய முந்திரி தொழிற்சாலை உள்ளது. அந்த  தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கருந்துகள்கள் நிறைந்த புகையால்  காற்று மாசடைந்து சுவாச கோளாறுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  தொழிற்சாலையின் கழிவுநீரை நிலத்திற்குள்ளேயே திருப்பி செலுத்துகின்றனர்.  இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த  தனியார் முந்திரி தொழிற்சாலையை  ஆய்வு செய்து பொதுமக்களை சுகாதார  சீர்கேட்டால் பாதிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு