×

நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை

நெய்வேலி, செப். 25:   நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அப்போது என்.எல்.சி நிர்வாகம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியது.

இதனையடுத்து நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை வட்டம் 13ல் உள்ள என்எல்சி விருந்தினர் இல்லத்தில் நடந்தது. என்எல்சி செயல் இயக்குனர் சதீஷ் பாபு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச தலைவர் வீர.ராமசந்திரன், பொதுச்செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி மற்றும் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர். பின்னர் தொ.மு.ச பொதுச்செயலாளர் சுகுமார் கூறுகையில், வரலாற்றில் முதன்முறையாக என்எல்சி நிர்வாகம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. அடுத்த கட்டமாக தொடர்ந்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Tags : talks ,NLC ,Neyveli ,contract workers ,
× RELATED தேர்தல் காலங்களில் ேமாசமான சட்ட வரம்பு மீறல்களை பாஜ அரசு செய்கிறது