×

முத்துப்பேட்டை அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

முத்துப்பேட்டை, செப்.25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மஞ்சளங்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. இப்பகுதியில் அரசின் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முழுமை பெறாமல் உள்ளது. இதில் தெருவிளக்கு வசதிகள் இருந்தும் எரிவது இல்லை. குடிநீர் வசதிகள் இருந்தும் இங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு, அதேபோல் சாலை வசதிகள் இருந்தும் அனைத்து சாலைகளுமே பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இந்நிலை இப்பகுதியில் உள்ள முக்கிய சாலையாக கருதுவது ரயில்வே கேட்டிலிருந்து பாமணி ஆறு ஓரத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலையானது சுமார் 2கிமீதூரம் உள்ள சாலையாகும். இது தற்பொழுது போதிய பராமரிப்பின்றி பல்லாங்குழியாய் மாறியுள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சாலையில் பலபகுதி ஆங்காங்கே பெயர்ந்து கருங்கல் ஜல்லிகள் சிதறி கிடக்கின்றன.

சிலஇடங்களில் தார்சாலை மாயமாகி மண்சாலையாகி விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் வயதானவர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லவும் தரமின்றி மாறிவிட்ட சாலைகுறித்து இப்பகுதி மக்கள் அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Muthupettai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி