×

மணவாசி நடுநிலை பள்ளியில் ஓசோன் படலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மரக்கன்றுகளும் நடப்பட்டன

கரூர், செப். 25: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கரூர் மாவட்டம் மணவாசி நடுநிலைப்பள்ளியில் ஒசோன் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சுிக்கு பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் முனீஸ்வரன் வரவேற்றார்.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி கலந்து கொண்டு ஒசோன் படலம் பாதுகாப்பும், எதனால் பாதிப்படைகிறது என்பது குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, ஒசோன் படலம் குறித்து ஒவியப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து மேட்டுப்பட்டி, இரும்பூதிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags : Middle School ,Bride ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி