×

கரூர் குளத்துப்பாளையம் பகுதியில் பராமரிப்பின்றி பழுதடைந்த சுகாதார வளாகம்

கரூர், செப். 25: கரூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது, இதில் ஆண்கள் பயன்படுத்தும் வளாகத்துக்கு செல்லும் பகுதி கடந்த பல மாதங்களாகவே உடைந்த நிலையில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சுகாதார வளாகம் வருபவர்கள் பள்ளத்தின் காரணமாக எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும் சரிவர பராமரிப்பு இல்லாத காரணத்தினால் துர்நாற்றமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.சுகாதார வளாக நுழைவு வாயில் பகுதி பள்ளமாகவும், உடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, பயன்படுத்துபவர்களின் நலன் கருதி இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.Tags : area ,Karur Kulathupalayam ,
× RELATED திருப்புவனம் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயப் பணி தீவிரம்