×

கரூர் வெங்கமேடு மேம்பால துவக்கத்தில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி

கரூர், செப். 25: கரூர் வெங்கமேடு மேம்பால துவக்கத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் வெங்கமேடு இடையே ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து மண்மங்கலம், நெரூர், சோமூர், சேலம், வேலூர், வெங்கமேடு, வாங்கப்பாளையம் போனற் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.இதே போல் இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. இது மட்டுமின்றி மேம்பால துவக்கத்தில் வலதுபுறம் ரயில் நிலையம், பசுபதிபாளையம் போன்ற பகுதிகளுக்கும், இடதுபுறம் செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் போன்ற டெக்ஸ்டைல்ஸ் நிறைந்த பகுதிகளுககும் வாகனங்கள் பிரிந்து செல்கிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுவதால் நான்கு புறமும் மேம்பால இறக்கத்தில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது போலீசார் வந்து நெருக்கடியை சீரமைத்து வருகின்றனர். இருப்பினும் இந்த பகுதியை தாண்டி செல்வதற்கு அரைமணி நேரம் ஆகிவிடுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை முற்றிலும் சீரமைக்கும் வகையில் தேவையான நிரந்தர ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Karur Venkamedu ,highway ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு