×

ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்சல் பாக்ஸ் உடைந்ததால் 3 மணி நேரம் தாமதம்

ஜோலார்பேட்டை, செப். 25: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் ஆக்சல் பாக்ஸ் உடைந்ததால் மூன்று மணி நேரம் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பிலாஸ்பூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 12.40 மணிக்கு ேவலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் வந்தடைந்தது. அப்போது ரயில் இன்ஜினில் இருந்து 7வது கம்பார்மென்டான எஸ்-9 கோச்சின் அடியில் இயங்கும் ஆக்சல் பாக்ஸ் உடைந்து அதிக சத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்த கம்பார்ட்மென்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், சீரமைக்க முடியாததால் எஸ்-9 பெட்டியை மட்டும் அகற்றி மீதமுள்ள பெட்டிகளுடன் இணைத்து சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக அங்கிருந்து ரயிலை இயக்கினர். இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்ற போது பயணிகள் எஸ்-9 பெட்டியில் இருந்து சத்தம் வருவதாக தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக ரயில்வே அதிகாரிகள் அங்கு ஆலோசனை செய்ததில் எந்த பாதிப்பும் இருக்காது எனக்கூறி ரயிலை அனுப்பினர். ஆனால், அந்த பெட்டியில் இருந்து மீண்டும் அதிக அதிர்வு ஏற்படுவதாக பயணிகள் மீண்டும் புகார் அளித்ததன்பேரில் அந்த பெட்டி மாற்றம் செய்யப்பட்டது. இதே நிலையில் நீடித்திருந்தால் ரயில்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கும்’ என்றனர்.

Tags : railway station ,Jolarpet ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...