×

திருக்கானூர்பட்டி கிராமத்தில் மக்காச்சோள படைப்புழு தாக்குதல் விழிப்புணர்வு முகாம்

தஞ்சை, செப். 25: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் மக்காச்சோள படைப்புழு தாக்குதல் மற்றும் கட்டுபாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண் அலுவலர் சுரேந்திரன் வரவேற்றார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் மதிராஜன் பேசும்போது, மக்களாசோள பயிரில் உழவு பணியில் துவங்கி அறுவடை வரை உள்ள அனைத்து நிலைகளிலும் மக்காசோள படைப்புழுவின் தாக்குதல் அறிகுறிகள் தெரிகிறது. எனவே பூச்சிகள் வாழ்க்கை சுழற்சி, உயிரியல் மற்றும் வேதியியல் மூலம் ஒருங்கிணைந்த முறையில் எவ்வாறு கண்காணித்து கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினார்.

தஞ்சை வேளா ண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் பேசுகையில், ஒருங்கிணைந்த முறையில் எவ்வாறு தொழு உரம், தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை தேவைக்கேற்ப இடுவது குறித்து விளக்கினார். பின்னர் விவசாயிகளின் நடைமுறை சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.முகாமில் முன்னோடி விவசாயிகளான பிலிப், மரியபிரான்சிஸ், இளங்கோவன், தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ், ராமசாமி, சிவானந்தம், ராஜேந்திரன், சேசுராஜ், கவியரசன், மனோகரன், ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Tirukkanurpatti Village ,
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...