×

தஞ்சை ராஜீவ்நகரில் தார்ச்சாலை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை, செப். 25: தஞ்சை ராஜீவ்நகரில் தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தஞ்சை- நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகே ராஜீவ் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இச்சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் இப்பகுதிவாசிகள் தஞ்சை- நாகை சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சாலை அமைத்து கொடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் விலக்கி கொண்டனர். இதனால் தஞ்சை- நாகை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,Thanjavur ,Rajiv Nagar ,
× RELATED மழை பெய்தால் அவ்வளவு தான் சறுக்கி விழ...