×

நகராட்சி அதிகாரிகள் அதிரடி கும்பகோணத்தில் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடை, வீடு அதிரடி அகற்றம்

கும்பகோணம், செப். 25: கும்பகோணத்தில் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்திருந்த ஒரு கடை மற்றும் ஒரு வீட்டை கோயில் நிர்வாகத்தினர் அகற்றினர்.கும்பகோணம் மடத்துதெருவில் யானை அடி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கோயிலையொட்டி கடந்த 30 ஆண்டுகளாக ராஜா என்பவர் பூக்கடையும், ராஜம் என்பவர் வீடு கட்டி ஆக்கிரமித்திருந்தனர். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை எதுவும் தராத நிலையில் நேற்று காலை இணை ஆணையர் சிவக்குமார் தலைமையில், உதவி ஆணையர் இளையராஜா முன்னிலையில் இன்ஸ்பெக்டர் சுதா, செயல் அலுவலர் சரண்யா மற்றும் கோயில் பணியாளர்கள் அந்த பூக்கடையையும், வீட்டையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் நேற்று காலையில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Municipal Authorities Action The Occupy Store ,Kumbakonam ,Temple ,
× RELATED கும்பகோணம் சுந்தர மகாகாளியம்மன் கோயில் விழா