×

காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில் மின்னணுவியல் தேசிய கருத்தரங்கம்

காரைக்கால், செப்.25: காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு தேசிய கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு, இயக்குனர் சங்கரநாராயணசாமி தலைமை வகித்தார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான காலிகட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.பி. பிள்ளை கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.இக்கருத்தரங்கின் ஒரு அங்கமாக தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் சங்கரநாராயணசாமி, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்துடன், தேசிய தொழில்நுட்ப கழக மாணவர் குழுமத்தை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் கௌரவ செயலர் ராஜாராம் கலந்துகொண்டு, மாணவர் குழுமத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விளக்கிக் கூறினார். கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 35க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து நிறுவனத்தினர், மாணவர்கள் பேசினர். முடிவில், கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Tags : Karaikal ,NIT Campus ,
× RELATED 7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்