×

விவசாயிகள் மும்முரம் ரேஷனில் பச்சரிசி வழங்காததால் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் வாக்குவாதம்

சீர்காழி, செப். 25:நாகை மாவட்டம் சீர்காழி நகர் மற்றும் கிராமப்புற ரேஷன் கடைகளில் தொடர்ந்து பல மாதங்களாக பச்சரிசி வழங்காமல் புழுங்கல் அரிசி  மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில். சீர்காழி சன்னதி தெருவை சேர்ந்த கணேசன் (76) என்ற முதியவர் 24-ம் தேதி காலை 12 மணிக்கு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்குவதில்லை என புகார் அளித்தார். பின்பு அங்கிருந்த அலுவலக ஊழியரிடம் வாக்குவாதம் செய்து சீர்காழி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் கடுமையாக திட்டினார். பிறகு அவரிடம் நாம் பேசிய போது,“நான் பச்சரிசி மட்டுமே சாப்பிடுவேன், புழுங்கல் அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் பாதிக்கப்பட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.

புழுங்கல் அரிசி எனக்கு ஒத்து கொள்ளவில்லை. மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே புழுங்கல் அரிசி சரியாக இருக்கும். சைவ உணவு சாப்பிடும் எனக்கு ஒத்து கொள்ளவில்லை. பல மாதங்களாக பச்சரிசி தராததால் நானும் என் மனைவி மங்களம் (72) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மொத்தம் மூன்று நபர்கள் உள்ள எங்கள் ரேஷன் கார்டுக்கு 20 கிலோ புழுங்கல் அரிசி தரப்படுகிறது. பிடாரி தெற்கு வீதி ரேஷன் கடையில்தான் பொருட்கள் வாங்குகிறேன். ஓட்டு மொத்தமாக சீர்காழி முழுவதும் ரேஷன் கடைகளில் பச்சரிசி தரப்படுவதில்லை. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று கூறினார். பிறகு சீர்காழி வட்ட வழங்கல் அலுவலரிடம் நாம் கேட்டபோது, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கப்டும் என்றார்.

Tags : office ,Mummuram ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...