×

தரங்கம்பாடி கடலில் மக்கள் குளிக்க தடை

தரங்கம்பாடி செப்.25: தரங்கம்பாடி கடல் அபாயகரமான கடல் பகுதி. இங்கு குளிப்பது உயிருக்கு ஆபத்து என்று கடலோர காவல்துறை எச்சரித்துள்ளது.நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை நீண்ட அழகான கடற்கரையாகும். இங்கு ஏராளமான வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், தரங்கம்பாடியை சுற்றி உள்ள பகுதியில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். தரங்கம்பாடி கடலில் குளிக்கும் போது இதுவரை 6க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் தரங்கம்பாடி கடற்கரை காவல் நிலையம் கடற்கரையில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளது. அதில் இது அபாயகரமான கடல் பகுதி. இங்கு குளிப்பது உயிருக்கு ஆபத்து. இதுவரை இப்பகுதியில் தோராயமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற எச்சரிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி கடற்கரையில் பல இடங்களில் வைத்துள்ளனர். மேலும் அதில் அவசர தொலைபேசி எண் 1093 என்றும் குறிப்பிட்டுள்ளனர். தரங்கம்பாடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Tags : Trangampady Sea ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு