×

வேலூர் அடுத்த சலமநத்தம் வனப்பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

கண்ணமங்கலம், செப்.25: வேலூர் அடுத்த சலமநத்தம் வனப்பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் டிஐஜி காமினி பங்கேற்றார்.வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை அடுத்த சலமநத்தம் மலையாடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையம் அருகில் காவல்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

எஸ்பி பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வரவேற்றார். வேலூர் சரக டிஐஜி என்.காமினி மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், எந்த துறையை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் இயற்கை வளத்தை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்றார். தொடர்ந்து சுமார் 100 ஏக்கர் வனப்பரப்பில் காவல் துறையினர் 2000 மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் காவலர் பயிற்சியாளர் செல்வம் நன்றி கூறினார்.

Tags : tree planting ceremony ,forest ,Salamanatham ,Vellore ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...