×

கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

திருவள்ளூர், செப்.25: திருவள்ளூர் அடுத்த கடம்பத்துர் அரசு மேல்நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு, தலைமை ஆசிரியை வே.ரேவதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொ.பூபாலன், பொருளாளர் ஆர்.பொன்னுதுரை முன்னிலை வகித்தனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வெற்றிச்செல்வி வரவேற்றார்.  முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்புராயன், நேர்முக உதவியாளர் திருவரசு ஆகியோர் மரக்கன்றுகள்  நட்டனர்.

பின்னர் பள்ளி வளாகம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து 7 நாட்கள் முகாம் வளாகம், கடைவீதி, திருத்தலங்கள், ஆரம்ப சுகாதார வளாகம், ஊராட்சி அலுவலகம் தூய்மை பணிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் கே.கேசவலு, எம்.மூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை உதவி தலைமையாசிரியர் பாலமுருகன் ஒருங்கிணைத்தார். முடிவில், உதவி திட்ட அலுவலர் அருணன் நன்றி கூறினார்.


Tags : Country Welfare Project Camp ,Kadambattur Government Higher Secondary School ,
× RELATED ஆர்.கொமாரபாளையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்