×

கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

திருவள்ளூர், செப்.25: திருவள்ளுர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், ''கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ரகங்களை விற்பனை செய்து 2018-19ம் ஆண்டில் ரூ.48.12 கோடி அளவிற்கு சென்னை மண்டலத்தில் மட்டும் சில்லறை  விற்பனை செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.இதில் திருவள்ளுர் விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.11 கோடி விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.  கோ-ஆப்டெக்ஸ் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குகிறது.திருவள்ளுர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு மட்டும் ரூ.70 லட்சம் தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் 30 சதவீத தள்ளுபடி இந்த ஆண்டும் அனைத்து கைத்தறி ரகங்களுக்கும்  வழங்கப்படுகிறது'''' என்றார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் சென்னை மண்டல மேலாளர் கோபால், திருவள்ளுர் விற்பனை நிலைய மேலாளர் ராமநாதன் கலந்துகொண்டனர்.

Tags : Diwali Special Sales Launch ,Go Apex ,
× RELATED கோ ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி விற்பனை...