×

காஞ்சிபுரம் பிடிவிஎஸ் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை

காஞ்சிபுரம், செப்.25: காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் உள்ள பிடிவிஎஸ் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வன்னியகுல சத்திரிய மகாசங்க பொதுப் பேரவைக்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட வன்னியகுல சத்திரிய மகாசங்க சிறப்பு பேரவைக் கூட்டம்  காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏவும், சங்க தலைவருமான பலராமன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர்  ஏழுமலை வரவேற்றார். நிர்வாகிகள் பார்த்திபன், முனுசாமி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்  காஞ்சிபுரம் பூக்கடை வியாபாரிகளுக்கு தொல்லை தரும் தனிநபர்களை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புன்னமை தியாகராய நாயகர் எழுதிவைத்த உயிலின் அடிப்படையில் வன்னிய குல ஷத்திரிய  சங்கத்தின் அறக்கட்டளை சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. தனிநபர் யாரும் உரிமை கோரமுடியாது.எனவே, காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பிடிவிஎஸ் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.இதில் ஆறுமுகம், ராஜி, பத்மநாபன், சீனிவாசன், சரவணன், சம்பத், ரவி, குமார்,  குப்பன், ஜெயவேல், கண்ணன், சங்கர், உமாபதி, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : school ,Kanchipuram PDVS ,secondary school ,
× RELATED கொரோனா பரவலை தடுக்க சிறப்பான...