×

பசுமை இந்தியா திட்டத்தின்கீழ் சங்கரா பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம், செப்.25: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஒரு மாணவன் ஒரு மரக்கன்று நடுதல் என்ற மத்திய அரசின் பசுமை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் விதமாக  மரக்கன்றுகள் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.பல்கலைக்கழக பதிவாளர் ஜி.சீனிவாசு தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைபாளர் நாகராஜன் வரவேற்றார். பல்கலைக்கழக நிதி அதிகாரி ராமகிருஷ்ணன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பூவரசன், மலைவேம்பு, வேம்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இலவச நாட்டு மரக்கன்றுகளை கொடுத்து உதவிய காஞ்சிபுரம் பசுமை குடில் அமைப்பின் மேகநாதன் மற்றும் அதன் குழுவினர்களை கௌரவித்து பாராட்டு  தெரிவிக்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி வினோத்குமார் செய்தார்.


Tags : Tree Planting Ceremony ,Sankara University ,
× RELATED மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா