×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் ₹75 லட்சம் மதிப்பில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கட்டிடம், சாலைகள்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்

வாலாஜாபாத், செப்.25: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 75 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் மற்றும் சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ நிதியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் புதிய கட்டிடம் மற்றும் தார்ச்சாலைகளை காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதனைத்தொடர்ந்து களியனூர், வையாவூர், மருதம், கரூர், சிங்காடிவாக்கம், அத்திவாக்கம், ஆலப்பாக்கம், ஆட்டுப்புத்தூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் கிராம மக்களுக்கும்  நன்றி தெரிவித்தார்.

அப்போது, காஞ்சிபுரம் எம்பி செல்வம், கிராம மக்களிடம், உங்கள் கிராமங்களில் உள்ள பிரச்னைகள் குறித்த மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வேதாசலம். ஒன்றிய துணை செயலாளர் பூபாலன் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மாசிலாமணி உள்ளிட்ட வாலாஜாபாத் ஒன்றிய திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

Tags : roads ,building ,MLA ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...